faq

Home   >   frequently asked questions


faq


ரிப்ஃலக்ஸாலஜி-கேள்வி-பதில்


1. ரிப்ஃலக்ஸாலஜி எப்படி வேலை செய்கிறது?
உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே பஞ்சபூத சக்தி உடலில் அதிகமானாலும், குறைந்தாலும் உடலின் இரத்த ஓட்டம் மற்றும் சக்தி ஓட்ட பாதை பாதிக்கப்பட்டு உடலில் நோய் ஏற்படுகிறது. பாதத்திலுள்ள உடலின் பிரதிபலிப்புப் புள்ளிகளை முறையான அழுத்தம் கொடுப்பதனால் இரத்த ஓட்டம் மற்றும் சக்தி ஓட்டப் பாதை சீரடைந்து நோய் குணமாகிறது.

2. மற்ற சிகிச்சையில் இருக்கும்போது ரிப்ஃலக்ஸாலஜி அழுத்தம் எடுக்கலாமா?
மற்ற மருத்துவத்துடன் சேர்ந்து செய்யும் ஓர் அரிய முறையாகும் எனவே மற்ற மருத்துவத்துடன் சேர்ந்து பயன்படுத்தும் போது இன்னும் விரைவாக குணம் கிடைக்கும்.

3. ரிப்ஃலக்ஸாலஜி அழுத்தம் பெற வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?
அ) உணவருந்தி குறைந்தது 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் அழுத்தம் பெறவேண்டும்.
ஆ) அழுத்தத்திற்கு வரும்முன் பாதத்தை சுத்தமாக கழுவி வருதல் வேண்டும்.
இ) அழுத்தத்திற்குப் பின் 30 நிமிடம் ஆகாரம் உட்கொள்ளாமலும், 2 மணி நேரம் நீரால் கழுவுதலும் கூடாது.

4. பாத அழுத்தத்தின் மூலம் எந்த நோய்களைக் குணப்படுத்தலாம்?
சில நோய்களைத் தவிர பெரும்பாலான நாள்பட்ட வியாதிகளை பக்கவிளைவுகள் இன்றி இயற்கை முறையில் குணப்படுத்தலாம். உதாரணமாக ஆஸ்துமா, சிறுநீரகக்கல், சிறு நீரகக்கோளாறு, இரத்த அழுத்தம் (B.P) மூட்டுவலி, முதுகுவலி, தண்டுவட எலும்பு சார்ந்த நோய்கள், தோல் வியாதிகள், தலைவலி, கழுத்துவலி, சிக்கன்குனியாவால் ஏற்பட்ட வலிகள், சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்பு, கண்பார்வை குறைபாடு, ஆண்களுக்கு ஏற்படும் உயிரணுக்கள் குறைபாடு, ஆண்மைக்குறைவு, மன அழுத்தம், பெண்களுக்கு எற்படும் முறையற்ற மாதபோக்கு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள், வலிப்பு நோய், வெள்ளைபடுதல், கருப்பைக்கட்டி, மார்பக கட்டி, குழந்தையின்மை, இரத்த சோகை, குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்பர் ஏக்டிவ் எனப்படும் அதிகப்படியான ஓட்டம், தொண்டைப் பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, வயிறு பிரச்சனைகள், கொழுப்புக் கட்டிகளைக் கரைத்தல், ஊரல், சொறியாசிஸ், வெரிகோஸ், உடல் பருமன், சி.பி.சைல்டு எனப்படும் மந்த குழந்தைகள், உடல் வளர்ச்சி குறைவு, ஞாபக மறதி, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு, காய்ச்சல், சளி போன்ற வியாதிகளை குணப்படுத்தலாம்.

5. நோயுற்றவர்கள் எத்தனை நாள் அழுத்தம் பெற வேண்டும்?
நோயின் தாக்கத்தைப் பொருத்தும், தற்போதைய உடல்நிலையை பொருத்தும் நாட்கள் வேறுபடும். இருப்பினும் வாரம் ஒருமுறை என குறைந்தது 8 வாரத்திற்கு அழுத்தம் பெற வேண்டும். பின் 15 நாட்களுக்கு ஒரு முறை என நோய் முழுமையாக குணமாகும் வரை அழுத்தம் பெற் வேண்டும்.

6. இந்த பாத அழுத்தம் எந்த நோய்களுக்கு பயன் தராது?
எலும்பு முறிவு, சதை சேதம், ஜவ்வு சேதம், நாள்பட்ட மனநோய், 18 வயதிற்கு மேல் உடல் வளர்ச்சி குறை போன்ற நோய்களைத் தவர மற்ற அனைத்து நோய்களுக்கும் பயன் தரும்.

7. நோய் வராமல் தடுக்க இந்த அழுத்த முறைகள் பயன் தருமா?
மாதம் ஒருமுறை உடலின் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க அழுத்தம் பெறலாம், மற்றும் முழு உடல் அழுத்தம் 6 மாதத்திற்கு ஒரு முறை பெறலாம்.

WHAT OUR PATIENTS ARE SAYING...
OUR POPULAR TREATMENTS...

Enquiry:


NATURE FOOT REFLEXOLOGY WELFARE CENTER
   T.MANIYARASAN- Reflexologist.
   +91 99420 19199, 98408 45060, 94455 82299.
  +91 98408 37080
   contactnfrwc@gmail.com

MAKE AN APPOINTMENT

© NATURE FOOT REFLEXOLOGY WELFARE CENTER. Developed : HARIV web technologies